பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனம் இலங்கையில் கிரிக்கெட் சிறப்பாக செயற்படவேண்டும் என யாழ்ப்பாணம் மட்டக்களப்பு கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் பாடசாலை கிரிக்கெட்டை உருவாக்க பாடசாலைகளை ஒருங்கினைத்து தம் பணியை இலங்கையில் குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் செய்து வருகின்றது.
அதில் ஒரு கட்டமாக தான் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தால் மட்டக்களப்பில் அமைப்படும் முதல் புற்தரையிலான மைதானத்திற்கான வேலைத்திட்டம் எவ்வாறு தொடங்கப்பட்டது அதன் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய 25.03.2018 அன்று இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் லன்டன் கோட்டைமுனை கிளை சார்பாக எங்கள் செயற் திட்டத்தை திரு.கேதீஸ்குமரன் வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.
இதன் மூலம் பிரித்தானிய தழிழ் கிரிக்கெட் சம்மேளனம் இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் எவ்வாறு கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிப்பதை அவதானிக்க முடிகின்றது அது மாத்திரமன்றி மட்டக்களப்பில் பாடசாலை மட்டத்தில்கிரிக்கெட் பயிற்சியாளாகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் முதல் பயிற்சியை இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரவீந்திர புஸ்பகுமாரவை அழைத்து பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
© 2019 British Tamils Cricket League. All Rights Reserved